சென்னை துறைமுகத்தின் வர்த்தக மற்றும் சரக்குக் கையாளும் திறனை மேம்படுத்தும் வகையில், நான்கு ஏற்றுமதி, இறக்குமதி கிடங்குகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
நான்கு கிடங்குகள் அமைக்கும் திட்டத்துக்கான மதிப்பீட்டுச் செலவு ரூ.73.91 கோடியாகும். மொத்தம் 18,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்தக் கிடங்குகள், வேளாண் பொருட்கள் மற்றும் உணவு தானியங்கள் உள்ளிட்ட சரக்குகளைப் பாதுகாப்பாகச் சேமிக்க உதவும்.
இந்த திட்டத்துடன் தார் சாலை அமைக்கப்பட்ட சரக்கு சேமிப்புப் பகுதி, மேம்படுத்தப்பட்ட கப்பல் பயணிகள் முனையம் மற்றும் கடற்பணியாளர்கள் மன்றம் ஆகியவையும் அடங்கும். இதன் மூலம் சரக்குக் கையாளுதல், சேமிப்பு வசதிகள் மற்றும் துறைமுகத்தின் செயல்திறன் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.